சிவகங்கை அருகே காவல்துறை உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் படுகொலை
செய்யப்பட்ட வழக்கின் முக்கியக் குற்றவாளிகளான பிரபு, பாரதி ஆகியோர்
என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கடந்த மாதம் 27 ஆம் தேதி வேகம்புத்தூரில் மருதுபாண்டியர் நினைவு நாளில்,
இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தடுக்கச் சென்ற
திருப்பாச்சேத்தி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் என்பரை, ரவுடிக்
கும்பல் கத்ததியால் குத்தியது. அப்போது இரண்டு காவலர்களும் படுகாயம்
அடைந்தனர். சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு
செல்லும் வழியில் ஆல்வின் சுதன் உயிரிழந்தார்.
இந்த படுகொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிவகங்கையை
சேர்ந்த பிரபு, மகேஸ்வரன்,முத்துகுமார் ஆகியோரை தேடி வந்தனர். இந்நிலையில்
இவர்கள் மூவரும் இம்மாதம் 6 ஆம் தேதி திருப்பூர் நீதித்துறை நடுவர்
நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர் மதுரை சிறையில் அவர்கள்
அடைக்கப்பட்டனர். இன்று மதுரை சிறையில் இருந்து சிவகங்கை நீதிமன்றம் கொண்டு
செல்லும்போது கருப்பாயூரணி அருகே பிரபு மற்றும் பாரதி தப்பிச் செல்ல
முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களை போலீஸார் சுட்டுக்கொன்றனர்.
-தேனி முருகேஸ்