சிவகங்கை மாவட்டம்




மருது பாண்டியர்கள், வேலூநாச்சியார் ஆண்ட பூமி
அடிப்படைத் தகவல்கள்
தலைநகர்
 சிவகங்கை
பரப்பு
 4,189 .கி.மீ







புவியியல் அமைவு
அட்சரேகை
 90.43-100.2N
தீர்க்கரேகை
 770.47-780.49E
இணையதளம்: 
www.sivaganga.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்: 

மின்னஞ்சல்: collrsvg@tn.nic.in
தொலைபேசி: 04646-241466

எல்லைகள்: இதன் வடங்கே திருச்சிராப்பள்ளியின் சிறுபகுதியும், புதுக்கோடை மாவட்டமும்; கிழக்கில் புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டமும், தெற்கில் இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டமும்; மேற்கில் மதுரை மாவட்டம் மற்றும் திருச்சிராப்பள்ளியின் சிறு பகுதியும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: முற்கால 'இராம்நாடு' அரசின் ஒரு பகுதி (தற்போதைய இராமநாதபுரம், சிவகங்கை சமஸ்தானம் உருவாக்கப்பட்டது. வேலுநாச்சியார் மரணத்திற்குப்பின் மருது சகோதரர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றனர். மருது சகோதரர்கள் வீழ்ச்சிக்குப்பின் பிரிட்டீஷார் , கவரி வல்லப பெரிய உடையத் தேவரை ஜமீன்தாரராக நியமித்தனர்.1985 மார்ச் 15-இல் இராமநாதபுரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, பசும்பொன் தேவர் திருமகன் மாவட்டம் உருவாக்கப்பட்டது.இது பிற்பாடு 1997இல் சிவங்கங்கை மாவட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


முக்கிய ஆறுகள்: வைகை,மாப்பாறு, தென்னாறு, சிறுகாணி

நிர்வாகப் பிரிவுகள்:

வருவாய் கோட்டங்கள்-2: தேவ கோட்டை, சிவகங்கை

தாலுகாக்ககள்-4: தேவகோட்டை, திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, இளையாங்குடி

நகராட்சிகள்-3: காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை

ஊராட்சி ஒன்றியங்கள் - 13: சிவகங்கை, காளையார் கோவில், இளையாங்குடி, மானா மதுரை, திருப்புவனம், தேவகோட்டை, கண்ணங்குடி, சக்கோட்டை, கல்ல்ல், திருப்பத்தூர், சிங்கம்பிணரி, எஸ். புதூர்

மருது பாண்டியர் நினைவாலயம்: வேலு நாயக்கர் பரம்பரையில் வந்த பெரிய மருது, சின்ன மருது சகோதரர்கள் வெள்ளையை எதிர்த்துப் போராடியதால் தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் நினைவாக ஸ்வீடிஷ் மருத்துவமனை வளாகத்தில் நினைவாலயம் 1992இல் திறக்கபட்டது.

காரைக்குடி: கலை நேர்த்தியும், கம்பீரமும் மிகுந்த செட்டிநாடு மாளிகைகள் நிறைந்தது.  கடல் கொண்ட பூம்புகாரை பூர்வீகமாக கொண்ட செட்டி நாட்டவர் விருந்தோம்பல் பண்பில் சிறந்தவர்கள்.

கண்ணதாசன் மணிமண்பம்: கவியரசர் கண்ணதாசனின் நினைவாக காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தின் எதிரே கட்டப்பட்ட மணிமண்டபம்.

இடைக்க்காட்டூர் தேவாலயம்: பிரான்சின் நீம்ஸ் கதீட்ரல் மாதிரியில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்தேவாலயம் கோதிக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டது.

திருகோஷ்டியூர்: 108திருப்பதிகளில் ஒன்றான சௌமிய நாராயணப்பெருமாள் ஆலயம்.  இது இராமானுஜர் வழிபட்ட பெருமமை பெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டால் ஆலையம்: கக

பிள்ளையார்பட்டி: காரைக்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மலையடிவாரக் கோவில். கேட்டவரம் தரும் இந்த கற்பக விநாயகர் திருவுருவம். இக் கோவில் முற்காலத்தில் 'ஏக்காட்டூர் திருவீங்கைகுடி மருதன்குடி ராஜா நாராயணபுரம்' என வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

இருப்பிடமும் /சிறப்புகளும்
சென்னையிலிருந்து 448 கி.மீதொலைவில் அமைந்துள்ளது.
இந்தியாவின் புகழ்பெற்ற மத்திய எலக்ட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம்
(செக்ரிகாரைக்குடியில் அமைந்துள்ளது.
63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாறன் நாயனார் 
பிறந்தஊர்.
உலகத் தரம் வாய்ந்த கிராபைட் கனிம்ம் இங்கு கிடைக்கிறது.
அழகப்பா பல்கலைக்க கழகத்தின் இருப்பிடம்.
தாயமங்கலம்காளையார்கோவில்கண்ட தேவி கோவில்
அச்சகங்கள்நவீன அரிசி ஆலைஇரசாயனப் பொருட்கள்பி.வி.சி
பைப்புள்நைலான் ஜிப்  போன்ற தொழிற்சாலைகள் அடங்கியமாவட்டம்.
குறிப்பிடத்தக்கோர்கவியரசு கண்ணதாசன்வள்ளல் அழகப்பச்செட்டியர்
குன்றக்குடி அடிகளார்கவியோகி சுத்தானந்த பாரதியார்.




வெவ்வேறு இடங்களில் மணல் கொள்ளை: 11பேர் கைது

   சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள வைகை ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.அதன் உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
   தப்பியோடிய லாரி ஓட்டுநர் ஒருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.ஆற்றில் மணல் அள்ளப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
  இதேபோல்,காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு பாலாற்றுப்படுகையில் அனுமதியின்றி மணல் அள்ளிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்கள் காஞ்சிபுரம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மணல் கடத்த உதவியதாக 4 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில் காட்டிற்குள் உள்ள மருத்துவமனை


     சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே உள்ள அமராவதிபுதூர் காச நோய் மருத்துவமனை நோயாளிகள் எளிதில் அணுக முடியாத நிலையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுகுறித்து இனி விரிவாகப் பார்க்கலாம்.
காட்டிற்குள் மருத்துவமனை:
மருத்துவமனைக்கு செல்வது ஒரு திகில் அனுபவம்... இது தேவக்கோட்டை அருகே உள்ள அமராவதிபுதூர் காச நோய் மருத்துவமனைக்கு செல்வோர் கூறும் வார்த்தைகள்... ஆங்கிலேய காலத்தில் கட்டப்பட்ட இந்த காச நோய் மருத்துவமனை எந்த ஒரு பராமரிப்பின்றி இருப்பதாக புகார் கூறுகின்றனர் அப்பகுதியின்ர். ஊரிலிருந்து சுமார் 2 கி.மீ காட்டுப்பகுதியின் உள்ளே சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை இருப்பதாகவும், ஆனால் அதற்கு ஏதுவாக சரியான சாலை வசதிகள் இன்றி, பெயர்ந்து போன வழிதடத்தில் நடந்து கூட செல்ல முடியாத சூழல் இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த மருத்துவமனைக்கு பேருந்து போக்குவரத்து இல்லாத காரணத்தினால், ஆட்டோவை நாடும் மக்களுக்கு அதிக வாடகை கூடுதல் வேதனை என்கின்றனர், இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள்... மேலும் இருள் சூழ்ந்த நேரங்களில் பெண்கள் அவ்வழியே சென்று வர அச்சப்படுகின்றனர். மேலும் சரியான மின் வசதி இல்லை என்றும், இருளில் பணிபுரிவதால் பல சிரமங்கள் ஏற்படுவதாகவும் மருத்துவமனை ஊழியர்கள் கூறுகின்றனர்.
காச நோய் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் குறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜாராமனின் கவனத்திற்கு கொண்டு சென்றது புதிய தலைமுறை. உடனடியாக மருத்துவமனை அதிகாரிகளை தொடர்பு கொண்ட அவர், தேவையான வசதிகளையும் கேட்டறிந்தார். ஆட்சியரின் ஆர்வத்திற்கு அதிகாரிகள் செயல் வடிவம் கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
                     -இணைய செய்தியாளர் - வெங்கடேஸ்

ரவுடிகள் 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

          சிவகங்கை அருகே காவல்துறை உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் முக்கியக் குற்றவாளிகளான பிரபு, பாரதி ஆகியோர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கடந்த மாதம் 27 ஆம் தேதி வேகம்புத்தூரில் மருதுபாண்டியர் நினைவு நாளில், இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தடுக்கச் சென்ற திருப்பாச்சேத்தி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் என்பரை, ரவுடிக் கும்பல் கத்ததியால் குத்தியது. அப்போது இரண்டு காவலர்களும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் ஆல்வின் சுதன் உயிரிழந்தார்.
இந்த படுகொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிவகங்கையை சேர்ந்த பிரபு, மகேஸ்வரன்,முத்துகுமார் ஆகியோரை தேடி வந்தனர். இந்நிலையில் இவர்கள் மூவரும் இம்மாதம் 6 ஆம் தேதி திருப்பூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர் மதுரை சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். இன்று மதுரை சிறையில் இருந்து சிவகங்கை நீதிமன்றம் கொண்டு செல்லும்போது கருப்பாயூரணி அருகே பிரபு மற்றும் பாரதி தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களை போலீஸார் சுட்டுக்கொன்றனர். 
-தேனி முருகேஸ்  

சிவகங்கை காவல்துறை உதவி ஆய்வாளர் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 8 பேர் கைது

   சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 8 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.
கடந்த 27ம் தேதி மருதுபாண்டியர் குருபூஜைக்கு விதிமுறைகளை மீறி வாகனங்களில் சென்றவர்களை தடுக்க முயன்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து புதுக்குளம் கிராமத்தில் மறைந்திருந்த சிங்கமுத்து, வடிவேல், ராஜகுரு, ஜோதிபாசு  உள்ளிட்ட 6 பேரும், கடலுார் மாவட்டம் வண்ணாங்காட்டில் மதியழகன், சக்திவேல் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் ஏழு பேரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.
-இணைய செய்தியாளர் - வெங்கடேஸ்

காணாமல் போகும் திண்ணைகள்...

      அந்தகால திண்ணை இன்னமும் நினைவில் நிற்கிறது. பாட்டி அகல் விளக்கு போடுவார்கள். அது விடிய… விடிய… எரிந்தபடி இருக்கும். வழி போக்கர்கள் யாராவது கட்டு சோற்று மூட்டையை பிரித்து அங்கு வைத்து சாபிட்டு கொஞ்ச நேரம் அசந்து தூங்கிவிட்டு விடிகாலையில் புறப்பட்டு போவார்கள். பாட்டி முழித்திருந்தால் "இந்தாப்பா தண்ணி" என்று ஒரு சோம்பு தண்ணியும் சிலசமயம் ஆவக்காய் ஊறுகாயும் கொடுப்பார்கள். "யார் பாட்டி?" என்று நான் கேட்பேன்."யாரோ அசலூர்காரா!'' என்று சொல்லிவிட்டு படுத்துவிடுவார்கள்.இப்போ அந்த திண்ணையும் போச்சு.அந்த 'மனுஷத்துவமும்' போச்சு....
-இணைய செய்தியாளர் - வெங்கடேஸ்
        ட்டிட கலைக்கு பெயர்பெற்றது செட்டிநாட்டு கட்டிடங்கள் ஆகும்.அந்த காலத்தில் கட்டப்பட்ட செட்டிநாட்டு வீடுகள் இன்று பாரம்பரிய சின்னங்களாக விளங்குகின்றன. ஒவ்வொரு வீடும் அரண்மனை மாதிரி காட்சி அளிக்கும். வீட்டின் நீளம் ஒரு தெருவில் ஆரம்பித்து மறு தெருவில் தான் முடியும். தமிழ்நாடு அரசு செட்டிநாட்டை சுற்றுலா தளமாக அறிவுத்துள்ளது.

உலகெங்கிலுமிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் செட்டிநாட்டு கட்டிட கலையை பார்ப்பதற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். பல வெளிநாட்டு மாணவர்கள் காரைக்குடியிலேயே தங்கி இவ்வீடுகளை பற்றி ஆராய்ச்சி செய்தும் வருகிறார்கள். மழை நீர் சேகரிப்பை பற்றி நாம் இன்று தான் பேசி கொண்டிருக்கிறோம். ஆனால் நகரத்தார்கள் அன்றைய காலத்திலேயே மழை நீரை சேகரிக்கும் வகையிலேயே வீடுகளை வடிவமைத்து இருக்கிறார்கள். மழை நீரை சேகரித்து பயன்படுத்தியும் வந்திருக்கிறார்கள்.செட்டிநாட்டு வீடுகளை சுற்றிப்பார்ப்பதற்க்கே ஒரு நாள் வேண்டும் .இன்றுள்ள ஆர்கிடெக்டுகளே ஆச்சர்யப்படும் அளவிற்கு செட்டிநாட்டு கட்டிடக்கலை அமைந்துள்ளது.
காரைக்குடியில் உள்ள ஒரு வீட்டில் திருடன் ஒருவன்
வீட்டுகாரர்களுக்கு தெரியாமலேயே மூன்று மாதம் வீட்டின் ஒரு பகுதியில் சமைத்து சாப்பிட்டு வந்தானாம்.அப்படியென்றால் எவ்வளவு பெரிய வீடுகளாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் .

செட்டிநாட்டு வீடுகள் சினிமா துறையினரையும்
விட்டு வைக்கவில்லை. இந்த வீடுகளால் ஈர்க்கப்பட்டு நிறைய சினிமா படப்பிடிப்புகளும் நடைபெற்று வருகிறது . இது வரை தமிழ், மலையாளம் ,கன்னடம் ,ஹிந்தி,தெலுங்கு உள்ளிட்ட நூற்றி இருபதிற்கும் மேற்ப்பட்ட சினிமா படப்பிடிப்புகள் இங்கு நடந்துள்ளன. ஏராளமான விளம்பர படப்பிடிப்புகளும் நடந்துள்ளன.

செட்டிநாட்டு உணவுமுறைகள் உலகப்புகழ் பெற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இன்று உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும் காரைக்குடி செட்டிநாடு ரெஸ்டாரன்ட்களை பார்க்க முடியும். அந்த அளவிற்கு செட்டிநாட்டு உணவு வகைகள் புகழ்பெற்றவை. நகரத்தார்கள் பெரும்பாலும் சிற்றுண்டியை பலகாரம் என்றே அழைப்பார்கள்.

யார் வீட்டுக்கு வந்தாலும் காலபலகாரம் (காலை சிற்றுண்டி)ஆச்சா என்று கேட்பார்கள். அதே போல் மாலை 4 மணியளவில் சாப்பிடுவதை இடைப்பலகாரம் என்று சொல்வார்கள். இவர்களின் திருமணங்களில் சாப்பாடு விஷயம் என்பது மிக முக்கியமான ஒன்று. திருமணங்களில் சைவ உணவே பரிமாறப்படும்.

ஆனால் பரிமாறப்படும் உணவு வகைகள் கணக்கற்றவை .மதிய விருந்துக்கு தலைவாழை (முழு வாழைஇலை )இலை போட்டு 18 வகையான காய்கறிகளுடன் விருந்து வைப்பார்கள் .அதே போல் சிற்றுண்டியிலும் வகை வகையாக வைத்து அசத்தி விடுவார்கள். கவுணி அரிசி, உக்காரை வெள்ளை பணியாரம் , பால் பணியாரம் இட்லி இல்லாமல் சிற்றுண்டி இருக்காது.இன்றும் செட்டிநாட்டில் தயாரிக்கப்படும் சீப்பு சீடை, தேன்குழல், மணகோலம், உருண்ட சீடை அதிரசம் போன்ற வகைகள் உலகின் பல நாட்டிற்கு ஏற்றுமதி ஆகிறது .
-இணைய செய்தியாளர் - செம்மொழி