துளசி

துளசி இலைகளை பசை போல அரைத்து, குளிக்கும்போது ஷாம்புவுக்குப் பதிலாக தலையில் தேய்த்துக் குளித்தால் பேன்கள் ஓடிவிடும்.

20 துளசி இலைகள், 1 ஆரஞ்சுப் பழத்தின் தோல் - இரண்டையும் காயவைத்துப் பொடியாக்கி, பல் துலக்க... பற்கள் பளிச்சிடும்.

துளசி இலை, மிளகு, சுக்கு - மூன்றையும் சம அளவு எடுத்து, தண்ணீரில் போட்டுக் காய்ச்சி கஷாயம் எடுங்கள். மிதமான சூட்டில் இந்த கஷாயத்தைக் குடித்தால்... தொண்டை வலி, மார்புச்சளி, ஜலதோஷத்தில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
-இணைய செய்தியாளர் - வெங்டேஸ்

மரம் தங்கசாமி ஐயா

 
இவர் தான் மரம் தங்கசாமி ஐயா அவர்கள் ... இவர்
இயற்கை ஆர்வலர்...
இயற்கை பாதுகாவலர் ...
இவர் தோட்டத்தில் இயற்கை காடுகளை கண்டோம்...
அவரின் துணிச்சலிலும், பேச்சிலும் என்னை கண்டேன்...
அன்பு ஒன்றுதான் கடவுள் என்பது இவர் பேச்சு...
200 க்கும் மேற்ப்பட்ட மரம் வகைகளை அவர் வைத்துள்ளார்.
பணம் மதிப்புமிக்க சந்தனம், செஞ்சந்தனம், ரோஸ்வுட் , தேக்கு , மகாகனி மரங்களும் அதிக அளவில் வைத்துள்ளார்.
பறவைகள் தண்ணீர் குடிப்பதற்காக ஆங்காங்கே தண்ணீர் தொட்டியும் வைத்துள்ளார்.
தமிழ்நாடு அரசாங்கம் மரம் வளர்க்கும் மக்களுக்கு நல்ல ஊக்கம் கொடுக்கவேண்டும் என்பது இவரின் கோரிக்கை .
குழந்தை பருவத்திலே மரம் வளர்க்கும் ஆர்வம் கொண்டுவரவேண்டும். அப்போது தான் அதன் நல்ல வருமானமும், பயனும் அவர்களுக்கு தெரியும் என்றார்...
                                                            -இணைய செய்தியாளர் - வெங்கடேஷ் 

மூலிகை பெட் ரால் ராமர் பிள்ளை



''ஆமா சார், 15 வருஷத்துக்கு முன்னால ஒரு லிட்டர் 13 ரூபாய்னு வித்தேன். இப்போ தொழில்நுட்பம் வளர்ந்துடுச்சு. அதனால ஒரு லிட்டர் அஞ்சு ரூபாய்க்குத் தயாரிக்கலாம். வரி விதிச்சா அதிக பட்சம் ஏழு ரூபாய் வரும். இப்போ ஒரு லிட்டர் 70 ரூபாய். இந்தக் காசுக்கு 14 லிட்டர் மாற்று எரிபொருள் போடலாம். நம்புறதுக்கு கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா, நடைமுறைக்கு வரும்போது எல்லாம் சரியாகிடும். நிச்சயம் என்னை நிரூபிப்பேன். ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்குத் திருப்புமுனையான செய்தியாக இது இருக்கும்!'' ....இத நம்பலாமா ???                                                                                         நன்றி :விகடன்

சருமத்தை காக்கும் கற்றாழை

சருமத்தை காக்கும் கற்றாழை ஜெல் பேக்!

வீட்டுத்தோட்டத்தில் வளர்க்கப்படும் சோற்றுக்கற்றாழை முக அழகை பாதுகாக்கும் அழகு சாதனப்பொருளாக பயன்படுகிறது. கோடைகாலத்தில் சருமம் வறட்சியடையாமல் பாதுகாப்பதோடு கொப்புளங்கள், முகப்பரு போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. கற்றாழையை உபயோகித்து காசு செலவில்லாமல் சருமத்தை பாதுகாப்பதற்கு அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனையை படியுங்களேன்.

கோடை கொப்புளங்கள்

கோடைகாலத்தில் சருமத்தில் ஆங்காங்கே கொப்புளங்கள் ஏற்படுவது இயல்பு. இதனால் வலியும் எரிச்சலும் ஏற்படும். இதற்கு கற்றாலை சிறந்த மருந்தாக செயல்படுகிறது. கற்றாழையை பறித்து அதனை பிழிந்து சாறு எடுத்து அதில் சில துளிகள் எலுமிச்சை சேர்த்து கலக்கவும். இதனை ஒரு பருத்தி துணியில் தொட்டு முகத்தில் நன்றாக அப்ளை செய்யவும். பத்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். இதனால் சருமம் பொலிவாகும். சருமம் வறட்சி நீங்கி ஈரப்பதத்தை தக்கவைக்கலாம்.

மூலிகை பேக்
கற்றாழைச் செடி அனைத்து சருமத்திற்கும் ஏற்ற சிறந்த மூலிகை யாகும். இதனை ஜெல் போல செய்து முகத்தில் பூசி வர சருமம் ஜொலிக்கும். கற்றாழை செடியை பறித்து நன்றாக அரைத்து அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்க்கவும் கண்களைத் தவிர பிற பகுதிகளில் திக்காக பேக் போல போடவும். பின்னர் நன்றாக மூன்று நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். இதனால் முகத்தில் உயிரிழந்த செல்கள் உதிர்ந்து விடும். பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தை கிளன்சர் கொண்டோ அல்லது குளிர்ந்த நீரிலோ கழுவி விடலாம். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்து வர முகம் பொலிவாகவும் மென்மையாக இருக்கும்.

முகப்பரு வராது
கற்றாழையை பறித்து அதை நன்றாக கொதிக்கும் நீரில் போட்டு வேக வைக்கவும். இதனை எடுத்து நன்றாக அரைக்கவும் அதனுடன் தேன் சேர்க்கவும். இந்த கலவையை நன்றாக முகம் முழுவதும் அப்ளை செய்யவும். நன்றாக காயவிட்டு பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். இதனை வாரம் ஒருமுறை செய்து வர முகப்பரு இருந்தால் மறைந்து விடும். முகப்பருவே வடுக்களோ ஏற்படாது. சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் கற்றாழையுடன் வெள்ளரிக்காய், தயிர் சேர்த்து அரைத்து பேஸ்ட் போல செய்யவும். பதினைந்து நிமிடம் ஊறவைத்து நன்றாக குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியோடு இருக்கும்.




வெள்ளரி!!!

 வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். உடலைக் குளிரவைக்கும்.
வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால், தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின், இத்தனையு வெள்ளரியில் உண்டு.

இவற்றைவிட, நம் இத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும். செரிமானம் தீவிரமாகும். பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விசேஷ ஜீரண நீர் சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.

மலத்தைக் கட்டுப்படுத்தும் பித்தத்தைக் குறைக்கும். உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப் போக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. வெள்ளரிப் பிஞ்சை உட்கொண்டால் திரிதோஷமும் போகும் என்று பழைய வைத்திய நூல்கள்பேசுகின்றன.
புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது.

நஞ்சை நீக்கும் அற்புக ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும்.
நுரையீரல் கோளாறுகள், கபம் & இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல.
                                                               இணையதள செய்தியாளர் :
- சுனிதா ராணி
 


அன்பான உறவுகளே இன்று +2 ரிஸல்ட் வெளியாகிறது ..வெற்றி பெறும் பிள்ளைகளை மேலும் ஊக்கப்படுத்துங்கள் தோல்வி பெறும் பிள்ளைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள் காயப்படுத்திவிடாதீர்கள் இன்றைய தோல்வி நாளைய இமாலய வெற்றிக்கு அடித்தளம் என்பதை கூறி அரவணையுங்கள் குறிப்பாக பெண்பிள்ளைகள் மிகவும் சோர்ந்துவிடுவார்கள் அன்போடு அரவணைத்து அவர்களின் சோர்வான மனநிலையை மாற்றுவதே அவர்களின் எதிர்காலத்துக்கான அருமருந்து ....         
                                                                                                                    
மாணவர்களின் எதிர்காலம் அக்கரையில்   -சிபிசந்தர்