மருது பாண்டியர்கள், வேலூநாச்சியார் ஆண்ட பூமி
அடிப்படைத் தகவல்கள்
| |
தலைநகர்
|
சிவகங்கை
|
பரப்பு
|
4,189 ச.கி.மீ
|
புவியியல் அமைவு
| |
அட்சரேகை
|
90.43-100.2N
|
தீர்க்கரேகை
|
770.47-780.49E
|
www.sivaganga.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்:
மின்னஞ்சல்: collrsvg@tn.nic.in
தொலைபேசி: 04646-241466
எல்லைகள்: இதன் வடங்கே திருச்சிராப்பள்ளியின் சிறுபகுதியும், புதுக்கோடை மாவட்டமும்; கிழக்கில் புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டமும், தெற்கில் இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டமும்; மேற்கில் மதுரை மாவட்டம் மற்றும் திருச்சிராப்பள்ளியின் சிறு பகுதியும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: முற்கால 'இராம்நாடு' அரசின் ஒரு பகுதி (தற்போதைய இராமநாதபுரம், சிவகங்கை சமஸ்தானம் உருவாக்கப்பட்டது. வேலுநாச்சியார் மரணத்திற்குப்பின் மருது சகோதரர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றனர். மருது சகோதரர்கள் வீழ்ச்சிக்குப்பின் பிரிட்டீஷார் , கவரி வல்லப பெரிய உடையத் தேவரை ஜமீன்தாரராக நியமித்தனர்.1985 மார்ச் 15-இல் இராமநாதபுரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, பசும்பொன் தேவர் திருமகன் மாவட்டம் உருவாக்கப்பட்டது.இது பிற்பாடு 1997இல் சிவங்கங்கை மாவட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய் கோட்டங்கள்-2: தேவ கோட்டை, சிவகங்கை
தாலுகாக்ககள்-4: தேவகோட்டை, திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, இளையாங்குடி
நகராட்சிகள்-3: காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை
ஊராட்சி ஒன்றியங்கள் - 13: சிவகங்கை, காளையார் கோவில், இளையாங்குடி, மானா மதுரை, திருப்புவனம், தேவகோட்டை, கண்ணங்குடி, சக்கோட்டை, கல்ல்ல், திருப்பத்தூர், சிங்கம்பிணரி, எஸ். புதூர்
மருது பாண்டியர் நினைவாலயம்: வேலு நாயக்கர் பரம்பரையில் வந்த பெரிய மருது, சின்ன மருது சகோதரர்கள் வெள்ளையை எதிர்த்துப் போராடியதால் தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் நினைவாக ஸ்வீடிஷ் மருத்துவமனை வளாகத்தில் நினைவாலயம் 1992இல் திறக்கபட்டது.
காரைக்குடி: கலை நேர்த்தியும், கம்பீரமும் மிகுந்த செட்டிநாடு மாளிகைகள் நிறைந்தது. கடல் கொண்ட பூம்புகாரை பூர்வீகமாக கொண்ட செட்டி நாட்டவர் விருந்தோம்பல் பண்பில் சிறந்தவர்கள்.
கண்ணதாசன் மணிமண்பம்: கவியரசர் கண்ணதாசனின் நினைவாக காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தின் எதிரே கட்டப்பட்ட மணிமண்டபம்.
இடைக்க்காட்டூர் தேவாலயம்: பிரான்சின் நீம்ஸ் கதீட்ரல் மாதிரியில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்தேவாலயம் கோதிக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டது.
திருகோஷ்டியூர்: 108திருப்பதிகளில் ஒன்றான சௌமிய நாராயணப்பெருமாள் ஆலயம். இது இராமானுஜர் வழிபட்ட பெருமமை பெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டால் ஆலையம்: கக
பிள்ளையார்பட்டி: காரைக்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மலையடிவாரக் கோவில். கேட்டவரம் தரும் இந்த கற்பக விநாயகர் திருவுருவம். இக் கோவில் முற்காலத்தில் 'ஏக்காட்டூர் திருவீங்கைகுடி மருதன்குடி ராஜா நாராயணபுரம்' என வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
இருப்பிடமும் /சிறப்புகளும்
சென்னையிலிருந்து 448 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.இந்தியாவின் புகழ்பெற்ற மத்திய எலக்ட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம்
(செக்ரி) காரைக்குடியில் அமைந்துள்ளது.
63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாறன் நாயனார்
பிறந்தஊர்.
உலகத் தரம் வாய்ந்த கிராபைட் கனிம்ம் இங்கு கிடைக்கிறது.
அழகப்பா பல்கலைக்க கழகத்தின் இருப்பிடம்.
தாயமங்கலம், காளையார்கோவில், கண்ட தேவி கோவில்
அச்சகங்கள், நவீன அரிசி ஆலை, இரசாயனப் பொருட்கள், பி.வி.சி
பைப்புள், நைலான் ஜிப் போன்ற தொழிற்சாலைகள் அடங்கியமாவட்டம்.
குறிப்பிடத்தக்கோர்: கவியரசு கண்ணதாசன், வள்ளல் அழகப்பச்செட்டியர்,
குன்றக்குடி அடிகளார், கவியோகி சுத்தானந்த பாரதியார்.